ஐயோ மாப்பிள இங்க ஒருக்கா சீக்ரமா ஓடி வாங்கோ!
மாப்ளே இங்க கொஞ்சம் ஓடி வாங்களே”ன்னு என் அத்தை எதிர் அறையிலேருந்து கத்த நான் பதறியடிச்சி ஓடிப்போறேன் அந்த அறைக்கு. அத்தை கையில் பாதி மயங்கிய நிலையிலே பகவதி.. ‘என்ன ஆச்சு அத்தை?’ன்னு நான் பதட்டத்தோட கேக்குறேன். ‘தெரியலை மாப்ளே.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அம்மா எனக்கு ஒரு மாதிரி கிறுகிறுன்ன வருதுன்னா.. அப்புறம் அப்படியே என் தோளிலே சாஞ்சிட்டா’ன்னு முடிக்க நான் ‘வாட்ச்மேன் வாட்ச்மேன்.. ‘ன்னு கத்த வாட்ச்மேன் வருகிறார். ‘என்னண்ணே. கூப்பிட்டீங்களா?’ ன்னு அவர் …