கும்இருட்டில் மோகினிப் பேய்க்கு முரட்டுக் குத்து!
ராக்கப்பன் தாயத்து கட்டுன தைரியத்துல, “சரி சரி..” என்று தலையாட்டிவிட்டு, “வரட்டும் அந்த மோகினிப்பேய். ஒருகை பாத்துப்புடறேன்..!!”ன்னு மார்தட்டிக் கொண்டான். ஆனா அவன் போதாத நேரம், அன்னிக்குன்னு பாத்து அவன் கூட்டாளிகள் ரெண்டு பேரும் உடம்பு சரியில்லேன்னு லீவுபோட, அவன் மட்டும் தனியாக செக்போஸ்டில் நைட் ட்யூட்டி பாக்க வேண்டியதாயிடுச்சு. ஊர்ல இருக்கற சாமியை எல்லாம் துணைக்குக் கூப்பிட்டுக்கிட்டு, ஏப்ரல் மாசத்திலேயும் நடுங்கிக்கிட்டே உட்கார்ந்திருந்தான். அந்த செக்போஸ்ட் கர்மம், ஊருக்கு வெளியிலே ரெண்டுமைல் தொலைவிலே இருந்திச்சு. ஒரு …